(நாள் ஒரு நூல் குழுமத்தில் இணைந்தால் ஒவ்வொரு நாளும் வலை ஏற்றுகிற செய்தியைப் பெறலாம்)

அன்புடையீர்

வணக்கம். தமிழம் வலையின் இணைப்பாக - தமிழ்ப் பேழை - என்ற இந்தப் பகுதி இணைக்கப் பட்டுள்ளது.

நாம், தமிழர் என்று நெஞ்சு நிமிர்த்துகிற வகையிலான செய்திகள் இந்தப் பக்கத்தில் இடம் பெறும்.

தமிழ்ப் புலவர்கள் - தமிழுக்காக இயங்கிய புலவர்களின் தொகுப்பு இது. இவர்களது தொடர் உழைப்பால்தான் மறைந்து கிடந்த பல்வேறு வகையான படைப்புகளும், செய்திகளும் வெளிச்சம் பெற்றன. இவர்களின் படைப்பாக்கங்கள் ஆய்வுக் கட்டுரைகள், விளக்க உரைகள் என்பன தமிழுக்குப் புத்துணர்வு ஊட்டுவதாக அமைந்துள்ளன. இந்த வகையில் இயங்கிய அனைத்துப் புலவர்களையும் இந்தப் பகுதியில் தொகுக்க வேண்டும். விடுபட்ட புகைப்படங்களை அனுப்பி உதவவும்.

தமிழர் நெஞ்சுயர்த்த - சங்கப் பாடல்களும், அரிய படைப்பாக்கங்களும் நூல்வடிவம் பெற்றுள்ளன. இருந்தாலும் அவை பலராலும் படிக்கப்பட வில்லை. எனவே, ஈர்ப்புடைய, ஆழமும் நுட்பமும் உடைய, இவ்வகையான பாடல்களை அறிமுகத்திற்காக இந்தப் பகுதியில் இணைக்க விரும்புகிறேன். நீங்களும் அனுப்பி வைக்கலாம்.

இசைப் பாடல்கள் - பாடலை இசைவடிவில் கேட்கும் பொழுது, பாடல் நினைவில் நிற்கிறது. திரும்பத் திரும்பக் கேட்கும் பொழுது பாடலின் இசையுடன் பாடலுக்கான கருத்தும் உள்நுழைந்து வழி நடத்துகிறது. எனவே இசை வடிவில் அமைந்த இலக்கியப் பாடல்களை இந்தப் பகுதியில் கேட்கலாம்.

நூல் அறிமுகம் - எமக்கு வந்த நூல்களை நூல் பற்றிய சிறு குறிப்புடன் இங்கு அறிமுகப்படுத்தப் படும்.

ஓவியங்கள் - ஓவியங்கள் படைப்பாற்றல் மிக்கவைகள். கருத்தை ஏற்றிச் சொல்லவும், பார்ப்பவரைச் சிந்திக்க வைத்து, இயங்க வைக்கவும் ஓவியங்கள் உதவுகின்றன. அரிய கோட்டோவியங்களையும், வண்ண ஓவியங்களையும் இந்தப் பக்கத்தில் வலை ஏற்ற விரும்புகிறேன்.

புகைப்படங்கள் - புகைப்படங்கள் தான் சான்றாவணங்களாக அமைகின்றன. நூற்றாண்டுகளுக்கப் பிறகு இவை சாட்சிகளாக இருந்து வரலாறு காட்டும். எனவே, இவ்வகையான புகைப்படங்களைத் தொகுத்து இந்தப் பக்கத்தில் இணைக்க விரும்புகிறேன். அரிய வீடியோ காட்சிகளையும் இந்தப் பக்கத்தில் இணைக்க விரும்புகிறேன்.

கணினிச் செயற்பாடுகள் - அறிவியல் கண்டுபிடிப்புகளில் தவிர்க்க முடியாதது கணினித் தொழில் நுட்பம். புலம் பெயர்ந்து வாழும் நம் தமிழர்களின் தொடர்புக் கருவியாக இருப்பதும் கணினியே. எனவே பல்வேறு வகையான மென் பொருள்களை உருவாக்க வேண்டியது தமிழுக்கான உயிர்த்துடிப்பாக அமைந்துள்ளது. இந்த வகையில் உருவான அனைத்தையும் வரிசைப் படுத்துவதோடு, அதன் வரலாறு காட்டுவதும் முதன்மையானதாகும். இந்தப் பக்கத்தில் இவ்வகையான செயற்பாடுகளை இணைக்க விரும்புகிறேன்.

அரியவை - அரியதாகவும், வியப்பூட்டுவதாகவும் அமைத்துள்ள தமிழியச் செயற்பாடுகள் இங்கு இடம் பெறும்.

தமிழம் வலையை முழுமையாகக் கண்டு கருத்தளிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

அன்புடன்
தமிழ்க்கனல், தமிழம் வலை, (01-04-2010)
கைபேசி : 9788552061, மின்அஞ்சல் pollachinasan@gmail.com


,